மணப்பாறையில் அனுமதியின்றி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

0 681
Stalin trichy visit

திருச்சி, டிச. 30  மணப்பாறையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய
அதிமுக வினர் கைது.
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதே போல் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகர், சின்னச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ்இளங்கோ, பொதுக்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சோனாஎத்திராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், பழனிச்சாமி, சேது உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து தமிழக அரசுக்கு எதிராககண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மணப்பாறை போலீசார் கைது செய்தனர். மேலும் அனைவரையும் கைது செய்து ஏற்றி செல்ல போதிய வாகனம் இல்லாத நிலையில் மாவட்ட செயலாளரை ஏற்றி சென்ற போலீஸ் வாகனத்தை சிறைபிடித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மேலும் இரண்டு வாகனங்கள் வரவழைத்தும் அதுவும் பாத்தாமல் போனதால் சுமார் 80 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்தவர்களை தங்கவைக்கும் திருமணமண்டபம் நோக்கி முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக நடந்து செல்ல ஆரம்பித்தனர். மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு அரசு பேருந்தை குறுக்கே நிறுத்தி அனைவரையும் கைது செய்து போலீசார் ஏற்றிச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.