அக்பர் சாலை நுழைவு வாயில் திறப்பு; அமைச்சர் அன்பில் மகேசுக்கு பொதுமக்கள் நன்றி

0 610
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, துவாக்குடி நகராட்சி வியாபாரிகள் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வாழும் மக்கள் BHEL- ஊரகத்தையொட்டியுள்ள அக்பர் சாலை நுழைவு வாயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வணிகர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மனு அளித்தனர்.

மனுவின் அடிப்படையில், BHEL GM/ICயிடம் இது குறித்து அமைச்சர் நேரில் சந்தித்து பேசியதன் விளைவாக இன்று முதல் அக்பர் சாலை நுழைவு வாயில் வழக்கம்போல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.