“தூர்வாரும் பணிக்காக திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.18.75 கோடி நிதி ஒதுக்கீடு”; பணியை தொடங்கி வைத்து அமைச்சர் தகவல்!

0 396
Stalin trichy visit

தமிழக முதல்வரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் காவிரி டெல்டா மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் ஆறுகள், வாய்க்கால் வடிகாலை தூர்வாரும் வகையில், ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 35.24 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணை தூர்வாரும் பணியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் மூலம் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களை தூர்வார்வதற்கு ரூ.80 கோடியை ஒதுக்கியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் 4 ஆயிரத்து 964.11 கிலோ மீட்டர் தூரத்திற்கு 683 பணிகள்

எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 810 எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி ஜூன் மாதம் 10ம் தேதிக்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அப்படி முடிவடைந்தால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்றடையும். மேலும் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை வருங்காலங்களில் தவிர்க்கவும், வடிகால்களை சீர்செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.18.75 கோடி மதிப்பீட்டில் 232.59 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால்கள்

மற்றும் ஆறுகள் மற்றும் வடிகால்கள் 90 பணிகள் தூர் வாருவதற்கு எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு தூர்வாரும் பணி சீரிய முறையில் நடைபெற்று தமிழக அரசின் 10 மாவட்டங்களுக்கு குடிமைப்பணி அலுவலர் ஐஏஎஸ் அளவில் கண்காணிப்பார் நீர்வள துறை மூலம் பணிகளை விரைவாக முடிக்கவும் நல்ல முறையில் மேற்கொள்ளப்படும் கூடுதலாக பொறியாளர்கள் தேவைக்கேற்ப இத்துறையில் பிற துறைகளில் இருந்து பணி அமர்ந்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு பணிக்கும் உழவர் குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே

துவாக்குடி பகுதியிலுள்ள சோழங்க பட்டிவாரியை ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த பணியானது இன்று (24ம் தேதி) தொடங்கி ஜூன் மாதம் 5ம் தேதி நிறைவடையும் என்றார். இந்த விழாவில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, திருச்சி கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்வம், நடு காவிரி வடிநில வட்ட செயற்பொறியாளர் மணிமோகன், திருச்சி உதவி பொறியாளர் ஜெயராமன், திருவெறும்பூர் உதவி பொறியாளர் ராஜரத்தினம் மற்றும் திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன் காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், கூத்தைப்பார் பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், மகளிரணி நிர்வாகிகள் கயல்விழி, ஞானதீபம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.