“தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்துதர முதல்வர் உத்தரவு” அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

0 370
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குஉட்பட்ட திருநெடுங்களம் ஊராட்சி தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை தலைமை வகித்து தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு கொண்டுவரப்பட்ட

சிறப்பு தீர்மானங்களை வாசித்தார். திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், தமிழக முதல்வர் ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கடந்த

ஆண்டுகளில் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்ட மக்கள் வெகுவாக குறைந்துள்ளதாக தற்பொழுது நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் மக்கள் அதிக அளவில் பங்குபெற செய்ய வேண்டும் என்று கூறியதோடு தமிழக முதல்வர் தேவராயநேரியில் நடக்கும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தன்னை அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே கலந்து கொண்டு உள்ளதாகவும், நடப்பது உங்கள் ஆட்சி உங்களை தேடி முதல்வரே வருகிறார். தமிழக முதல்வரை உங்கள் இன மக்கள் வீட்டிற்கு நேரிடையாக சென்று சாப்பிட்டார். அப்போது நீங்கள் காரமான உணவு கொடுத்ததோடு நாங்கள் காரமாண உணவு

சாப்பிடுவதால்தான் கொரோனா என வரவில்லை என தாங்கள் கூறிய கருத்தை ஏற்றுக்கொண்டு தமிழக முதல்வர் வீட்டில் அதிக காரமான உணவை சாப்பிடுகிறார் என்றால் நாங்கள் எம்மாத்திரம். எனவே உங்கள் தேவைகளை மனுக்களாக எழுதிக் கொடுங்கள் தகுதியுள்ள மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் 19 தீர்மாணங்கள்

நிறைவேற்றப்படுவதாகவும் அதில் மூன்று, ஒன்பது, 11 ஆகிய தீர்மானங்கள் என்னுடைய துறைக்கு சம்பந்தமானது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் அப்போது தான் அவர்களின் தேவை தெரியும் மேலும் இந்த பகுதியில் குடிநீர், லைட், ரோடு சாலை அதனை சரி செய்வதற்கு தனி கவனம் செலுத்த முதல்வரும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். உங்களுக்கு செய்த பிறகுதான் மற்றவர்களுக்கு தேவையானதை செய்வோம் என்றும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் இனி வரும் ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்து கொண்டு முந்தைய கூட்டங்களில் கொடுக்கப்பட்ட உள்ள மனுக்களுக்கு

தீர்வு என்ன என்பதை கேட்டு அறிந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த விழாவில் முன்னதாக நெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் வரவேற்பதோடு இந்த ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் நினைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொதுக் கழிப்பிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதாகவும், சிமெண்ட் சாலை இரண்டும் செயல்படுத்த உள்ளதாகவும்,

மேலும் இந்த பகுதிக்கு சிறப்பு திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு, 6 சாலைகள் சிமெண்ட் சாலைகளாக அமைத்து தர வேண்டும், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த விழாவில் முன்னாள் எம்எல்ஏ சேகரன், காட்டுப் பகுதி செயலாளர் நீலமேகம், துவாக்குடி நகர செயலாளர் காயாம்பு, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உட்பட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.