மாற்றுக்கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
திருச்சி, ஏப். 6 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சி, தேவராயநேரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க)
கட்சியிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது.
த.வெ.க இளைஞர் அணி துணைச் செயலாளர் இளம்பருதி தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர்,அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து, அவர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, திருநெடுங்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள், ஏராளமானோர் உடனிருந்தனர். மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த இளைஞர்களை அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.