திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy
திருச்சி மாவட்டம் ,மருங்காபுரி வட்டம் நல்லூர் ஊராட்சியில் போக்குவரத்து சாலையின் குறுக்கே மிகவும் அபாயகரமான மின்கம்பம் பலத்த காற்று வீசினால் கூட தாங்காத நிலையில் மின்கம்பம் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர் .

இந்நிலையில் அக்கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக விபத்தை தவிர்க்க துவரங்குறிச்சி துணை மின்நிலைய அலுவலர் அவர்களுக்கு பல முறை மனு அளித்தும் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வருகிறார்கள்.

அவ்வழியாக பள்ளி வாகனம், அலுலக பணிக்கு செல்லும் அலுவலர்கள்,கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அபாயகரமான மின்கம்பத்தை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்கள். உயிர் பலி ஆகும் முன்னரே விரைந்து மின்கம்பத்தை மாற்றி தர பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்து வருகின்றனர்.