அடையாளம் தெரியாத வாகனம் மோதி காட்டெருமை பலி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு மதுரை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபத்திற்கு எதிரே காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது.
இதைப்பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காட்டெருமை இறந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. பின்னர் காட்டெருமை பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது.