தீபாவளி முடிந்தும் போனஸ் வழங்கவில்லை; கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் பாய்லர் ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நிர்வாகமானது ஜே.சி.எம். தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் சரியான செயல் திட்டத்துடன் உற்பத்தியை லாபத்தில் நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவன மெயின் கேட் முன்புநேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஐஎன்டியூசி தலைமையில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டனர்.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தீபாவளி முடிந்து இதுவரை பெல் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கவில்லை என்றும், பெல் நிர்வாகத்தை உற்பத்தித் திறன் குறித்து தொழிற்சங்கங்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும் ,உற்பத்தியை எவ்வாறு நிறைவு செய்ய போகிறோம் என்பது குறித்தும் தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் இன்று வரை தெரிவிக்காதது கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மேலும் பாய்லர் ஆலை வளாகத்தை சுற்றியுள்ள பள்ளிகள் திறந்துள்ள நிலையில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு இன்னும் நிர்வாகம் செய்து தராததைகண்டித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஐஎன்டியூசி தொழிற்சங்க பொதுச் செயலாளர் அந்தோணி அலெக்ஸிஸ் திரவியம் மற்றும் செயல் தலைவர் கல்யாணகுமார் மணிமாறன் அம்பேத்கர் யூனியன் பொதுச் செயலாளர் முருகன் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.