ஜப்பான் – தென்கொரியாவில் அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரசுப் பள்ளி மாணவர்களோடு ‘ஜப்பான் சென்றார். அங்கு ஜப்பான் தமிழ்ச் சங்கம்’ அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்குள்ள தமிழர்கள் மற்றும் மாணவர்களோடு கலந்துரையாடினார்.

தொடர்ந்து தென்கொரிய நாட்டிற்கு சென்று தென்கொரிய அரசுப் பள்ளியை மாணவர்களோடு இணைந்து பார்வையிட்டார். ‘தென்கொரிய தமிழ்ச் சங்கம்’ அளித்த வரவேற்பு நிகழ்விலும் கலந்துகொண்டு ‘தென்கொரியா-தமிழ்நாடு’ இடையேயான வரலாற்று நிகழ்வுகள் மற்றும் நட்புறவுகள் பற்றி சிறப்புரையாற்றினார்.