திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

0 513
Stalin trichy visit

திருச்சி, ஆக.22 திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் ரூ.1 லட்சம் கைமாறப்போவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று மாலை திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பிரசன்னா வெங்கடேசன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் கணக்கில் வராத ரூ.47 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வளியே தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை கைப்பற்றினர்.
மேலும் இது தொடர்பாக அலுவலகத்தில் இருந்த பதிவாளர்(பொறுப்பு) இந்துகுமார் உள்பட ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.