ஸ்ரீரங்கத்தில் உள்ள துணை ஆட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை

0 421
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள சாரதி நகர் 2வது தெருவில் உள்ள மன்னார்குடி துணை ஆட்சியர் பவானி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையில், 7 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அவருக்கு சொந்தமான திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள வாளாடி பெட்ரோல் நிலையம், அரியலூர் மாவட்டம் டால்மியாபுரம் பகுதியில் உள்ள அலுமினிய தொழிற்சாலை மற்றும் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சாலையில் உள்ள SVR மேல்நிலைப் பள்ளியிலும் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கத்தில் தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.