தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆத்தூர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

0 406
Stalin trichy visit

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாக இருந்த சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவருமான ஆத்தூர் இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, சேலம், திருச்சி உட்பட 27 மாவட்டங்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு, கல்வி நிலையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அவருக்கு சொந்தமான எம்.ஐ.டி. கல்வி குழுமங்களில் தஞ்சாவூர் மாவட்ட உதவி கண்காணிப்பாளர் ராஜ் தலைமையிலும், வீடு மற்றும் அறக்கட்டளையில் திருச்சி உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.