கலைத் திருவிழா போட்டி : அரசு பள்ளி மாணவர் சாதனை
லால்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்று சாதனை.
திருச்சி மாவட்டம்
லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகேஸ்வரன் மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில் இரண்டாம் இடமும் மற்றும் செவ்வியல் இசையில் இரண்டாம் இடமும் பெற்று சாதனை படைத்ததுள்ளார்.
லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி_ கிருத்திகா தம்பதிகளின் மகன் லோகேஸ்வரன். இவர் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாதஸ்வரம் மற்றும் செவ்வியல் இசையில் ஆர்வமாக இருந்த மாணவனுக்கு நாதஸ்வர இசைக் கலைஞர் ஆனந்தன் பயிற்சி கொடுத்துள்ளார் இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் டிசம்பர் மாதங்களில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் கலை இலக்கியத் திருவிழா நடைபெற்றது இதில் பாட்டு இசை நடனம் பேச்சு கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளிகளில் நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வட்டாரா அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலும்,மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலும் பங்கேற்றனர். இந்நிலையில் லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர் லோகேஸ்வரன் மதுரையில் மாநில அளவில் நடைபெற்ற கலை இலக்கிய திருவிழா போட்டியில் நாதஸ்வரம் வாசிக்கும் போட்டியில் இரண்டாம் இடமும் மற்றும் செவ்வியல் இசையில் இரண்டாம் இடமும் வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளார் .