அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் கொடியேற்ற விழா இன்று நடைபெற்றது

0 246
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் இத்திருக்கோயில் சிவபெருமான் அப்பர் பெருமானாகிய திருநாவுக்கரசருக்கு திருக்கட்டமுது அளித்து காட்சி அருளியதும், அதிகார வல்லவராகிய சிவபெருமான் எமதர்மராஜனுக்கு இழந்த பதவியையும், அதிகாரத்தை மீண்டும் வழங்கியதும், திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இத்திருக்கோயிலில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் ஆடிப்பூர திருத்தேரோட்ட விழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.அருள்மிகு விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது.விழாவின்  முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருத்தேரோட்டம் ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெற உள்ளது.கொடியேற்ற நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.