நீச்சல் குளத்தில் விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று விழிப்புணர்வு செஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை மாநகர காவல் துணை ஆணையர் வி.அன்பு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.