மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தம்பதி மீது தாக்குதல்; 4 வாலிபர்கள் கைது!

0 401
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 41). கட்டிட தொழிலாளி. இவர் என்ஜினீயர் மணிவண்ணன் என்பவரிடம் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கா நகரில் மணிவண்ணன் புதிய வீடு கட்டி வருகிறார். சுரேஷ் அந்த இடத்தில் கொட்டகை அமைத்து மனைவி ரங்கம்மாள், மகன்கள் ஹரி ஹரன், சிவக்குமார் ஆகியோருடன் தங்கி கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கட்டிட பணி நடைபெறும் இடத்தில் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(வயது 30), அஜித்குமார் (வயது 23), ராம்குமார்(வயது 21), விமல்(வயது 21) ஆகியோர் மது அருந்தினர். அப்போது சுரேஷ் இதனை தட்டிகேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள்

 

வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் உருட்டுக்கட்டையால் கணவன், மனைவியை தாக்கினர். மேலும் அங்கு வைத்திருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்கம், 2 செல்போன்களை பறித்து சென்றனர். மேலும் ஸ்ரீரங்கம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் 4 பேரும் நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த

மோகனவிக்னேஷ் என்பவரிடம் பணம் கேட்டு தாக்க முயன்றனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.