குழந்தைஇல்லாத ஏக்கம், கடன் தொல்லையால் காவலாளி தூக்கிட்டு தற்கொலை!

0 300
Stalin trichy visit

திருச்சி தில்லை நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. மேலும் இவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் சம்பவத்தன்று

 

இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து தில்லை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த லிங்கை க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH

Leave A Reply

Your email address will not be published.