“கெடு முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுப்பு” ஆத்திரம் அடைந்த தம்பதி பெண் மீது தாக்குதல்!

0 374
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை மாரியம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயமோகன்(வயது 40), விவசாயி. இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த அன்பரசு (வயது 36) என்பவருக்கு ஒத்திகைக்கு விட்டிருந்தார். கெடு முடிந்தும் காலி செய்யாமல் இருந்ததால் ஜெயமோகன் மனைவி மணிமேகலைக்கும்,

அன்பரசுக்கும் இடையே வாய்த கராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அன்பரசு, அவரது மனைவி மீனாட்சி இருவரும் சேர்ந்து மணிமேகலையை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து அன்பரசை கைது செய்து அவரது மனைவி மீனாட்சியை தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.