“தூக்கில் தொங்கிய டிரைவர்” பள்ளி சென்று திரும்பிய மனைவிக்கு அதிர்ச்சி!

0 415
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஆங்கரை பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து(வயது 37), தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர். திருமணமான இவருக்கு சகாயமேரி என்ற மனைவி, பிரவின் என்ற மகன், பிரீத்தி என்ற மகள் உள்ளனர். இந்நிலையில், சகாயமேரி குழந்தைகளை பள்ளியில் விட்டு வர சென்றார். அப்போது,

காளிமுத்து வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மனைவி இதை கண்டு அதிர்ச்சியடைந்தார். லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லால்குடி இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.