திருச்சி துறையூர் சாலையில் மின் தடையை கண்டித்து மக்கள் தீடீர் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காசுகடைத் தெருவில் மின்தடையை கண்டித்து திருச்சி துறையூர் சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மணச்சநல்லூரில் உள்ள காசுகடைத்தெருவில் நேற்று மதியம் 2 மணி…

மேட்டூர் அணை நாளை திறப்பு: திருச்சி முக்கொம்பு மேலணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

மேட்டூர் அணை நாளை 12-06-2023 திறக்கப்பட உள்ளதையொட்டி முக்கொம்பு மேலணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து நாளை திங்கட்கிழமை டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர்…

திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் படி திருச்சி மாவட்டத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள்…

வெங்கடாஜலபதி  கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

துறையூரில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலையில் பிரசன்ன வெங்கடாஜலபதி  கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி உற்சவ பெருமாள் உபயநாச்சியார்களுடன் சமேதராக  பெருமாள்மலை தலத்திலிருந்து புறப்பட்டு அடிவாரத்திலுள்ள அனுமன்…

திருச்சி மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம்

திருச்சி மாநகராட்சி பெண் கவுன்சிலர்கள் தெலுங்கானா பயணம்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு  அறிவுரையின்படி   திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் சாஹஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாமா -  "சர்குலேஷன்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பைக் திருடன் தப்பி ஓட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியைச் சேர்ந்த மாதவன் ( 26), திருப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22) ஆகிய  இரண்டு வாலிபர்களை…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி, ஜுன் 10 திருச்சி உணவு பாதுகாப்பு ஆணையரகம் புதுடெல்லி மூலமாக அகில இந்திய அளவில் போட்டி நடத்தியது. மாவட்டத்தில் பாதுகாப்பான மற்றும் சுகாதார உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து…

சிறுமியின் கல்வி கட்டணத்தை ஏற்றார் மாவட்ட ஆட்சியர்

திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தபோது, ஒரு சிறுமி முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும்…

இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அ.ரா.பிரகாஷ் திருச்சி மண்டல இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை திருவானைக்காவலில் உள்ள திருச்சி இந்து சமய அறநிலையத்துறை…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் இன்று தொடங்குகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார்…