அதிகாரிகள் அதிரடி…திருச்சி பீடா ஸ்டாலுக்கு ‘சீல்’
திருச்சி முசிறி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த விஜயலெட்சுமி பீடா ஸ்டாலில் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 6-ந் தேதி, கடந்த 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பீடா கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மலாசா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார், பீடா கடைக்கு தடையாணை பிறப்பித்தார். இதையடுத்து பீடா ஸ்டாலுக்கு அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.