ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நாளை திதி கொடுக்க அனுமதி இல்லை

0 666
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக நாளை (6.10.2021 ) புதன்கிழமை மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் கூடி திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது.

மேலும் காவிரி ஆற்றின் அனைத்து கரைப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.