திருச்சியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், மகளிர் மேம்பாட்டு திட்ட மையமும் இணைந்து கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

திருச்சி கல்லணை திருவளர்ச்சோலை செங்கல் சூளையில் லால்குடி வட்டங்கள் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடராஜபுறத்திலும் மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேங்கை குறிச்சி கிராமத்தில் செங்கல் சூளையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஜமுனா சட்ட தன்னார்வலர்கள், அக்னி சிறகு இயக்குனர் மகேந்திரன், WDPS இயக்குனர் கீதாலட்சுமி மற்றும் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.