திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

0 655
Stalin trichy visit

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் வரும் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்க உள்ளன.
வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் தொழில் பயிற்சி முடித்த (18வயது முதல் 35வயது வரை) அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ் நகல், சுயவிவரக் குறிப்பு, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறை வேலைவாய்ப்பு பெற விரும்பும் மாணவர்கள் 8ம் தேதி வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.