ஸ்ரீரங்கத்தில் நாளை பாலாலய விழா

0 343
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ வாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், திருப்பணிக்கான பாலாலய விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதைமுன்னிட்டு நாளை காலை 6 மணிக்கு வடகாவிரியிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 12.30 மணிக்குள், சிறப்பு ஹோமத்துடன் ஸ்ரீ பகவதியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பாலாலயம் நடை பெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.