பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது : பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வரும் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் :
தனியார் மயமாக்கல் சமீப கால நடவடிக்கைகளை பார்த்தால் அச்சமாக இருக்கிறது.
BHEL நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே பெருமை சேர்க்கும் ஒரு நிறுவனம் – எந்த வகையிலும் பெல் நிறுவனத்தை தனியார் மயமாக்க கூடாது.
திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக முறையாக நடக்கவில்லை – 2017ல்
350 கோடி ஒதுக்கீடு செய்தும் எந்த வேலையும் ஒழுங்காக நடக்க வில்லை.
துறை சார்ந்த அமைச்சர் இங்கு இருக்கிறார் – அவர் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை – 17-ஆம் தேதி டெல்லியில் காவேரி நீர் மேலாண்மை ஆணையம் கூட்டத்தை நடத்த இருக்கிறது – அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக திட்ட அறிக்கையை விவாதிக்க உள்ளது – இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது,சட்டத்திற்கு எதிரானது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க எந்த அதிகாரமும் இல்லை.
காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பு எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே,அனை கட்டுவதை பற்றி பேச அதிகாரம் இல்லை
– எனவே இதில் தமிழக அரசு தலையிட்டு இந்த கூட்டம் நடைபெறாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் – இல்லையென்றால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.