வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

0 337
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் சங்கராநகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர்கள் நேற்று திருடிச் சென்றனர்.

நம்பர் 1 டோல்கேட் சங்கராநகர் குருநாதா அப்பார்ட்மெண்ட்டில் வசிப்பவர் ராஜேந்திரன். இவருடைய மகன் 32 வயதான ரமேஷ்குமார். இவர் நேற்று முன்தினம் இரவு அவருக்கு சொந்தமான பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது பைக் மாயமானது.இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ்குமார் கொள்ளிடம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.