சமயபுரத்தில் பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை நேற்று அபேஸ் செய்த மர்ம நபர்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சந்தைகேட் பகுதியில் பெண்ணின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை அபேஸ் செய்து தப்பி சென்ற மர்ம நபர்கள்.
ஸ்ரீரங்கம் பூதையூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் துரைசாமி இவருடைய மனைவி 67 வயதான லட்சுமி்.இவர் ஸ்ரீரங்கத்திலிருந்து அரசு பேருந்தில் சமயபுரம் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.. அப்போது சமயபுரம் சந்தைப்கேட் பகுதியில் கீழே இறங்கி பார்த்தபோது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மாயமானது தெரியவந்தது இதுகுறித்து லட்சுமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.