பைக் திருடர்கள் கைது
திருச்சி, ஜுன் 24 திருச்சி மாவட்டம்,றையூர் சித்திரப்பட்டியில் வசித்து வருபவர் இம்ரான்அகமத் இவர் நேற்று முன்தினம் துறையூரில் உள்ள முசிறி ரவுண்டானாவில் நின்று செல்போனை பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் ஆழ்ந்திருந்தனர் அப்போது அங்கு நின்ற இம்ரான்அஹமத்பேசிக் கொண்டிருந்த செல்போனை சட்டென பறித்து சென்றார்கள்.
இதை அடுத்து இம்ரான் அகமத் துறையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் துறையூர் அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார், அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இரண்டு பேரை மறித்து விசாரணை செய்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்கள். இதனை அடுத்து இருவரையும் பிடித்து விசாரணை செய்த போது அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த மேளவாக்கம் பகுதியை சேர்ந்தமணிகண்டன் (23)
என்பதும்மற்றும் இவருடன் வந்தவர் காளிமுத்து (19) இவர் திண்டுக்கலை சேர்ந்தவர் இருவரும் சம்பவத்தன்று திண்டுக்கல்லில் உள்ள மணிகண்டனின் பாட்டி வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் துறையூரில் உள்ள மணிகண்டனின் தங்கை வீட்டிற்கு வந்துள்ளார்கள் மீண்டும் துறையூர் வழியாக வெளியூர் செல்வதற்காக சென்றபோது மணிகண்டன் மற்றும் காளிமுத்து இருவரும் முசிறி பிரிவு ரோட்டில் செல்போன் பறித்து சென்றது தெரியவந்தது மணிகண்டன் ஏற்கனவே குற்றவாளி என்பதும் வழிபறி திருட்டு போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது இதை அடுத்து இருவரையும் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆசைப்படுத்தினர் செல்போன் திருடப்பட்ட ஒரிரு நாளிலேயே துறையூர் போலீசார் குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.