108 வைணவ தலங்களில் முதன்மையானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவில் ஆகும்.
இங்கு மாதம்தோறும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது இன்று திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

உண்டியல்கள் திறந்து இணை ஆணையர் செ.மாரிமுத்து, திருச்சி , பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன் , திருவானைக்கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் எண்பப்பட்டு வருகிறது. உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.