போலி உணவு பாதுகாப்பு அலுவலர் கைது

0 684
Stalin trichy visit
Fake Food Safety Officer Arrested 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள தனியார் உணவகத்தில் ஒரு நபர் தான் ஒரு உணவு பாதுகாப்பு அதிகாரி என கூறி உணவகத்தை ஆய்வு செய்து பணம் கேட்டு மிரட்டிய போலி உணவு பாதுகாப்பு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் கடைவீதியில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது.
அவ்வுணவகத்திற்கு வந்த நபர் சாப்பிட்டு விட்டு அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டு, அதில் சில குறைகள் உள்ளது. இதற்கு அபராதமாக ரூ.1,00,000/- அரசுக்கு கட்ட வேண்டும். இல்லையெனில், நான் கூறுகின்ற செல் நம்பருக்கு ரூ.10,000/- அனுப்புமாறு கூறியதாகவும், ஆனால், உணவகத்தினர் உணவகத்தின் உரிமையாளர் வந்ததும், அனுப்புகிறோம் எனக்கூறியதாகவும் தெரியவருகிறது.
அதன் பிறகு. உணவகத்தின் உரிமையாளர், மேற்படி உணவு பாதுகாப்பு அதிகாரியாக வந்தவரை பற்றி விசாரணை செய்த போது, மேற்படி நபர் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக இல்லை என தெரியவந்தது. உடனடியாக மேற்படி உணவகத்தின் உரிமையாளர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 -ஐ தொடர்பு கொண்டு மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண்குமார், அவர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, ஒரு தனிப்படையினை நியமித்து மேற்கண்ட போலி நபரை பிடிப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பேரில். தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு, உணவு பாதுகாப்பு அதிகாரியாக ஏமாற்றிய திருச்சி திருவெறும்பூர் தாலுகா, வடக்கு காட்டூர், பாரி நகர், 5-வது தெருவைச் சேர்ந்த சுப்ரமணியம் மகன் 44 வயதான திருமுருகன் என்பவரை கைது செய்து, மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட திருமுருகன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும், இவர் B.E.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்சமயம்.மண்ணச்சநல்லூர் DK IAS அகாடமியில் பணிபுரிந்து வருவதாக தெரியவருகிறது.மேலும்
ஏமாற்று சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும், இவர் மீது
கோயம்புத்தூர், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆயுத வழக்குகள்,மோசடி வழக்குகள் உள்ளிட்ட மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் திருமுருகன் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.