திருச்சி அரசு மருத்துவமனையில் புதிய காவல் நிலைய கட்டுமானப்பணி
திருச்சி, ஜன.20 திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பவுள்ள காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுவதற்காக அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர ஆணையர் காமினி, மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், காவல் துணை ஆணையர் ஈஸ்வரன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குமரவேல், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் உதயஅருணா, மருத்துவர் அருண், மருத்துவத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர் மாவட் நகர் ஊரமைப்புக்குழு உறுப்பினர் வைரமணி, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.