திருச்சி அருகே தீ குளித்த சிறுவன் பலி!

0 448
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள தவிட்டுபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகன் குமரேசன் (17). இவரது வீட்டிற்கு அருகே மற்றொரு வீட்டில் வசித்த இவரது தாத்தாவான கருப்பையா கடந்த ஒரு மாதத்திற்கு முன் இறந்து உள்ளார்.

இதனால் மனமுடைந்த நிலையில் தாத்தாவின் வீட்டில் இருந்த குமரேசன் திங்கட்கிழமை மாலை திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து காட்டுப்புத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்

இது குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.