திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள பொன்னம்பட்டி மந்தை தெருவை சேர்ந்தவர் செல்வ பிரபு (25). கூலி தொழிலாளியான இவர் பழைய வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள புதிய வீட்டிற்கு சென்று அங்கு இரவு தூங்கி விட்டு மீண்டும் காலை பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் பணம் ஆகியவை
கொள்ளை போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.