திருச்சி அரசுமருத்துவமனையில் 17வயது சிறுமி குழந்தை பெற்றதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையத்திற்கு தகவல் சென்றது. இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது முசிறி தாலுகாவை சேர்ந்த பிளஸ்2 படிக்கும் 17 வயது சிறுமி தொட்டியம் தாலுகாவில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாதபோது தம்பி முறை உள்ள 10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் தெரிவதை கண்ட பெற்றோர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.