முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாள் – திருச்சி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை!
முன்னாள் மத்திய அமைச்சர்
முரசொலி மாறனின் 88 வது பிறந்த நாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அமைச்சரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்ட கழக திமுக அலுவலகத்தில் முரசொலிமாறன் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர்
கே.என் சேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலிமாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், செந்தில், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன் உட்பட கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo