உற்பத்தி பொருளை சேமிக்க குடோனை பயன்படுத்தும் விவசாயிக்கு, ரூ.3 லட்சம் கடன் உதவி

0 434
Stalin trichy visit

திருச்சி விற்பனைக்குழு கட்டுபாட்டின் மாவட்டத்தில் உள்ள லால்குடி, மண்ணச்சநல்லூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, கீழ் திருச்சி காட்டுப்புத்தூர், தாத்தையங்கார்பேட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் அறிக்கையிடப்பட்ட வேளாண் விளைபொருட்களான நெல் உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி போன்ற வேளாண் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலை பெற கிட்டங்கி மற்றும் உலர் கள வசதியுடன் உள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு மறைமுக ஏலம் மூலம் தங்கள் விளைபொருள்களின் தரத்திற்கேற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது.


விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு தரகு மற்றும் கமிஷன் பிடித்தம் ஏதுமின்றி நேரிடையாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. சரியான எடை, உடனடி பணப்பட்டுவாடா, பொருளீட்டுக்கடன் வசதி, குளிர்பதன வசதி, காப்பீடு வசதி, உழவர்நலநிதிதிட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உள்ளது.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதியும், விளைபொருளை உலர்த்துவதற்கு உலர்கள வசதியும் உள்ளது. ஒரு விவசாயி அதிகபட்சமாக 180 நாட்களுக்கு தங்களது விளைபொருட்களை கிட்டங்கியில் சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. மீதமுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலுக்கு 5 பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது.


மேலும் விளைபொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத்தேவைகளுக்கு அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 லட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் உதவி வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த வட்டியாக 5 சதவீத வட்டிவீதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

பொருளீட்டுக்கடன் இருப்பு வைத்த முதல் 15 நாட்களுக்கு எவ்வித வட்டியும் இல்லாத சலுகை வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஒரு வருடத்தில் 1 மெட்ரிக் டன் அளவு விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விற்பனை செய்திருந்தால் உழவர் நலநிதித்திட்டத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுவர். இவர்கள் விபத்து மற்றும் பாம்புகடியால் இறந்து விட்டால் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு பிரீமியத் தொகை அரசே ஏற்கிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.