தருமபுரம் ஆதீனம் மடத்தில் வேட்பாளர் துரைவைகோ வாழ்த்து பெற்றார்

0 274
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 28 திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள, தருமபுரம் ஆதீனம் மௌன மடத்திற்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ சென்று வாழ்த்து பெற்றார்.

திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன், திருச்சி அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள, திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருளாட்சிக்கு உட்பட்ட, தருமபுரம் ஆதீனம் மௌன மடம், கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகளை, திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரைவைகோ இன்று காலை 10.30 மணியளவில் நேரில் சந்தித்து ஆசியையும், வாழ்த்துகளையும் பெற்றார்.

இந்நிகழ்வில், திமுக கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவாணன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி பொறுப்பாளர் புதூர் மு.பூமிநாதன், கழக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.