வேட்பாளர் அருண்நேருவுக்கு சி.பி.ஐ.மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் மாவட்ட கழக அலுவலகத்திற்கு இன்று காலை 6.00.மணியளவில் வருகை தந்தார்.
வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் -போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகிய இருவரும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன்,
பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், எஸ்.அண்ணாதுரை,
மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது கம்யூனிஸ்ட், வலது கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, அகில இந்திய தொழிலாளர் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.