கலைக்குழுவினருடன் வேட்பாளர் மரியம்பீவி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

0 373
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர் மன்ற தேர்தலில் 21வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மரியம்பீவி, பன்னை சிங்கார வேலன் கலை குழுவினருடன் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு தீவிர பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது, அனைத்து பகுதிக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, மின் விளக்கு வசதி மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் ம.ம.க மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், ம.ம.க. நகர தலைவர் அக்பர் பாட்ஷா, திமுக வட்ட வெற்றி செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.