தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் குழித்தட்டு நாற்றங்கால் செயல்விளக்கம்!
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக திருச்சி மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவத்தின் ஒரு பகுதியாக முத்தயநல்லூர் மிளகாய் விவசாயிகளுக்கு குழிதட்டு நாற்றங்கால் தொழில்நுட்ப உற்பத்தி முறையை செயல் விளக்கம் அளித்து அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

மேலும் இலை சுருட்டல் நோய் பரப்பும் வெள்ளை ஈ பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு மஞ்சல் வண்ண ஒட்டும் பொறி பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.