புதுக்கோட்டை மாவட்டம் மேலமுத்துடையாண்பட்டி அருகே குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நவநீதன். இவர் இன்று தனது வீட்டில் இருந்து புறப்பட்டு திருச்சி உறையூர் காவல் நிலையம் அருகே அண்ணாமலை நகரில் உள்ள கார் அலுவலகத்தின் மூலம் தனது காரினை மறு விற்பனைக்காக எடுத்து வந்துள்ளார்.

அப்போது திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டெஸ்ட் டிரைவ் செய்யும்போது குடமுருட்டி ரயில்வே பாலம் அருகில் தீடீரென கார் தீ பிடித்து எரிந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் காரை நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்கள் காரிலிருந்து குதித்து தப்பினர்.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரின் தீயை அணைத்தனர். இதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் கரூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய.. https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8