ஷேர் ஆட்டோவில் பயணியிடம் செல்போன் திருட்டு; பஸ்சை வழிமறித்து 2 பெண்களை பிடித்த ஆட்டோ டிரைவர்!

0 415
Stalin trichy visit

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பிராட்டியூர், கே.கே.நகர், பஞ்சப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஞ்சப்பூருக்கு ஷேர் ஆட்டோ சென்றது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். கூட்டத்தை பயன்படுத்திய 2 பெண்கள் செல்போன் மற்றும் பர்ஸ்களை அபேஸ் செய்தனர். இதில், ஒரு பெண் தனது செல்போனை காணாதது கண்டு கூச்சலிட்டார். அப்போது எடமலைப்பட்டிபுதூர் பஸ் நிறுத்தத்தில் ஷேர் ஆட்டோ நின்றதை அடுத்து அதில்

இருந்து 2 பெண்கள் இறங்கி வேகமாக சென்று அங்கு நின்ற பஸ்சில் ஏறினர். இதை பார்த்த ஷேர் ஆட்டோ டிரைவர் முரளி(வயது 25) வேகமாக ஷேர் ஆட்டோவை விரட்டி சென்று பஞ்சப்பூர் அருகே பஸ்சை வழிமறித்து பஸ்சிலிருந்த அந்த 2 பெண்களை பிடித்தார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. தகவலறிந்த எ.புதூர் போலீசார் அங்கு சென்று 2 பெண்களையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் 2 ஆன்ட்ராய்டு மற்றும் 2 சாதாரண செல்போன், ரூ.2,800 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். விசாரணை யில், அவர்கள் மதுரை மாவட்டம், மேலூர் சொக்கம்பட்டி பாரதிபுரம் ராமு(எ)ராஜூ(வயது 40), அதே பகுதி லதா (வயது 52) என்பது தெரியவந்தது.

Leave A Reply

Your email address will not be published.