திருச்சி ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வைத்தீஸ்வரன் (வயது 29). சுமை தூக்கும் தொழிலாளி இவர் சம்பவத்தன்று மணல்வாரி ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (21), கார்த்திகேயன் (21), திருஞானசம்பந்தமூர்த்தி (21), இவர்கள் 3 பேரும் வைத்தீஸ்வரனிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் பையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு அவர்கள் 3 பேரும் தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், கார்த்திகேயன், திருஞானசம்பந்தமூர்த்தி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.