திருச்சியில் கல்லூரி துணை முதல்வரை கடத்தி பணம் பறித்த தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது 

0 797
Stalin trichy visit

திருச்சி கருமண்டபம் வசந்த் நகரை சேர்ந்தவர் விமல் ஆதித்யன். இவர் தனியார் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். திருமணம் ஆனவர். அக்கல்லூரி அவரது ஒழுங்கீன செயல் காரணமாக அவரை பணி நீக்கம் செய்தது. தற்போது மற்றொரு தனியார் கல்லூரியில் பேராசிரியர் மற்றும் துணை முதல்வராக பணியாற்றி வருகிறார். விமல் ஆதித்தனுக்கு தான் முதலில் பணியாற்றிய கல்லுாரியில், அவருடன் பணியாற்றி வந்த நிவேதிதா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிவேதிதாவிற்கு, பேராசிரியர் விமல் ஆதித்தனே வரன் தேடி, துறையூரை சேர்ந்த சசிகுமார் என்பவரை நிச்சயித்து திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்னரும் விமல் ஆதித்தன்-நிவேதா தொடர்பு நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் உள்ள கள்ளத்தொடர்பு, கணவர் சசிகுமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் சசிகுமார், தன்னுடன் சிலரை சேர்த்து கொண்டு, தற்போது துணை முதல்வராக பணியாற்றும் விமல் ஆதித்யனை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

 

அதைத்தொடர்ந்து ரூ.2 லட்சம் கைமாறியது. ஆனாலும் இது போதாது, இன்னும் வேண்டும் என்று கேட்டு விமல் ஆதித்தனை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் துணை முதல்வரின் மனைவி, மேலும் ரூ.40 ஆயிரம் மற்றும் சொத்து பத்திரங்களை கொண்டு சென்று சசிகுமாரிடம் கொடுத்து, கணவரை மீட்டார். அப்போது அந்த ஆவணத்துடன் விமல் ஆதித்தன்-நிவேதா தொடர்புடைய சில ஆபாச வீடியோக்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் விமல் ஆதித்தன்,தன்னை கடத்தி சென்று சிலர் பணம் பறித்ததாக புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோசலைராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடத்தல் வழக்கு தொடர்பாக துறையூரை சேர்ந்த சசிகுமார், திருச்சி மிளகுபாறையை சேர்ந்த பிரசாந்த், லாசர் ஆரோக்கியராஜ் ஆகியோரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர். கைதான லாசர் ஆரோக்கியராஜ், மிளகுபாறை பகுதி தி.மு.க.பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

துணை முதல்வரான பேராசிரியர் கடத்தல் வழக்கில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, கடத்தல் புகார் கொடுத்த விமல் ஆதித்தன், தன்னுடன் பழகிய பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் 30-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடியோக்கள்தான் தற்போது போலீசார் கையில் சிக்கி உள்ளது.

இந்த வழக்கில் போலீசார் முறையாக பதில் அளிக்கவும் தயக்கம் காட்டி வருகிறார்கள். விமல் ஆதித்தன் மீது புகார் கொடுக்கும் பட்சத்தில் பல உண்மைகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.