திருச்சி கொண்ணக்குடி கிராமத்தை சோ்ந்த நந்தகுமார் என்ற வாலிபா் ஜமால் முகமது கல்லூரியில் தமிழ் இளங்கலை பட்டபடிப்பு படித்து வந்தார். இவா் கல்லூரிக்கு நாமக்கலில் இருந்து புறப்பட்டு திருச்சி நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து கூட்டம் அதிகம் இருந்ததால்,
சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் பேருந்து திரும்பும்போது, கை நழுவி கீழே விழுந்துள்ளார். அப்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் அவா் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.