10ம் தேதி இலவச கறவைமாடு வளர்ப்பு பயிற்சி!

0 353
Stalin trichy visit

திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இங்கு வரும் 10ம் தேதி இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக் கும் முறைகள், முறையான பராமரிப்பு, செயற்கை முறை கருவூட்டல், கன்று பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவ னப்புற்கள் சாகுபடி,

தீவன மரங்கள் வளர்ப்பு, நோய்தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங் கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேரவிரும் புவோர் நாளை 9ம் தேதி காலை 11 க்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என கால்நடை பல்கலை தலைவர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.