லால்குடியில் சமுதாய வளைகாப்பு விழா

0 299
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பொன்னி சியாமளா அனைவரையும் வரவேற்று பேசினார். லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், லால்குடி ஒன்றிய பெருந்தலைவர் ரவிச்சந்திரன் , வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ) குணசேகரன், வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம், பேரூராட்சி செயல் அலுவலர் நாளாயினி, ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பேசுகையில், தமிழகத்தில் முதன்முதலில் 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் நோக்கமே கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல ஊட்டச்சத்து உணவு கொடுத்து அவர்கள் ஈன்றெடுக்கும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கவும், பிறந்த குழந்தை எந்த நோய் நொடி இல்லாமலும், குழந்தையை பெற்றெடுக்கும் தாய் நல்ல சத்தான உணவை எடுத்துக்கொள்ளவும், குழந்தைகள் நன்றாக இருக்கவும், குழந்தைகளுக்கும் தாய்க்கும் ஊட்டச்சத்து உணவு வழங்க இந்த சமுதாய வளைகாப்பு திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார் என்றார்.


விழாவில் மருத்துவ அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர், லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் R.சுதாகரன், LNP பள்ளி தலைமையாசிரியர் S.நளினா, செயலாளர் V.குணசேகரன், மருத்துவ அலுவலர் திரு.முத்துவிஜயன், பூவாளூர் செயல் அலுவலர் , நகரச் செயலாளர் துரைமாணிக்கம், கோத்தாரி, TVS தொண்டு நிறுவனங்கள், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், போஷான் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் R.ஆனந்த், திட்ட உதவியாளர் உமா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.