திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் விவசாயி பலி – உறவினர்கள் பரபரப்பு புகார்!

0 640
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அடுத்த காவல்கார பாளையம் ராசாத்தி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மருதை (70) இவர் விவசாயம் செய்து வருகிறார். கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க இவரை மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவருக்கு சுவாச கோளாறு இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ளார்.
இருப்பினும் வரை கட்டாயப்படுத்தி தடுப்பூசி ஊசி போடவில்லை என்றால் நியாயவிலை கடைகளில் அரிசி,பருப்பு,தரமாட்டேன் என்று அரசு அதிகாரிகள் “கூறியதாக மருதையன் உறவினர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணி அவரது வீட்டு அருகே உள்ள தடுப்பூசி முகாமுக்கு சென்று கோவிசீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தி கொண்டார். உடல் அசதி என்று கூறி கண் உறங்கியவர் வெகுநேரமாகியும் எழவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பேட்டி அளித்த அவரது மருமகன் குமார்…அவர் நன்றாக வேலை பார்த்து வந்தார்.அவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வற்புறுத்தினர். இதனால் வேறு வழியின்றி அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் முன்னே மருத்துவர்கள் அவருக்கு ஏதேனும் சுவாச கோளாறு, மூச்சுத்திணறல், இரத்த கொதிப்பு,சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் உள்ளதா என கேட்கவில்லை.நன்றாக வேலை பார்த்து வந்த எனது மாமனார் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதால் உயிரிழந்துவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய உறவினர் இதேபோல தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதுடன் உயிரிழந்துவிட்டார்.எனவே மருத்துவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்.இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.