
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் 100 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகள் வருவாய்த்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சத்துணவுத்திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, கதிரவன், அப்துல் சமத், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
